மும்பை: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி நேற்று யு.பி.யோதாஸ் அணியை வீழ்த்தியது.மும்பை, என்எஸ்சிஐ அரங்கில் நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடிய தமிழ் தலைவாஸ் புள்ளிகளைக் குவித்து இடைவேளையின்போது முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அந்த அணி, ஆட்ட நேர முடிவில் 46-27 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தமிழ் தலைவாஸ் இதுவரை 11 லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11வது இடத்தில் உள்ளது. புனேரி பல்தான் (46 புள்ளி) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தபாங் டெல்லி கே.சி. (40), குஜராத் ஜயன்ட்ஸ் (39), ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் (38), யு மும்பா (32 புள்ளி) அடுத்த இடங்களில் உள்ளன.
The post தமிழ் தலைவாஸ் 3வது வெற்றி appeared first on Dinakaran.